Presidents Rule in Manipur : மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி குறித்த தீர்மானத்தை அமித் ஷா முன்மொழிகிறார். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Presidents Rule in Manipur : மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி குறித்த தீர்மானத்தை அமித் ஷா முன்மொழிகிறார். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on: April 3, 2025 at 11:02 am
புதுடெல்லி ஏப்ரல் 3 2025: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பதற்கான தீர்மானத்தை மக்கள் அவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3 2025) அதிகாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்திற்கு கட்சி வேறுபாடுகளைக் கடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தார்கள். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூரில் இந்த பிரச்சனைக்கு காரணம் மத்திய அரசுதான் என பாஜகவை குற்றம் சாட்டினார்கள்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ” மணிப்பூர் மாநிலத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்றார்.
மேலும் கடந்த நான்கு மாதங்களாக மணிப்பூரில் எந்த வன்முறையும் இல்லை என பதிவு செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மாநிலத்தில் அமைதி தொடர்ந்து நீடிக்க மெய்ட்டே மற்றும் குக்கி சமூக குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, ” மாநிலத்தில் நிலமை அமைதியாக உள்ளது; எனினும் திருப்திகரமாக இருக்கிறது என நான் கூற மாட்டேன். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றார்.
இதுகுறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, ” மணிப்பூரில் பிளவு வாத அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்றார். தொடர்ந்து இயல்பு நிலை அங்கு திரும்ப வேண்டும். அமைதியும் நல்லிணக்கமும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
இந்த தீர்மானம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில், ” காங்கிரஸ் கட்சி இந்த தீர்மானத்தை முழு மனதோடு ஆதரிக்கிறது; நாங்கள் மாநிலத்தில் அமைதியையும், நிலைதன்மையும் மீட்டெடுக்க விரும்புகிறோம். கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும், ” மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க கிளர்ச்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் சசிதரூர் எம்பி கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர்தான்.. ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com