Ramdas Athawale: நரேந்திர மோடி நான்காவது முறையாக பிரதமர் ஆவார் எனக் கூறியுள்ளார் ராம்தாஸ் அட்வாலே.
Ramdas Athawale: நரேந்திர மோடி நான்காவது முறையாக பிரதமர் ஆவார் எனக் கூறியுள்ளார் ராம்தாஸ் அட்வாலே.
Published on: March 29, 2025 at 10:21 pm
பாட்னா மார்ச் 29 2025: பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (மார்ச் 29 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” பிரதமர் நரேந்திர மோடி நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார்” என்றார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய ராமதாஸ் அத்வாலே, “பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது; இந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் இன்று முதலமைச்சர் நிதீஷ் குமாரை அவரது வீட்டில் சந்தித்தேன். பீகார் மாநிலத்தை பொருத்தவரை எங்கள் கட்சிக்கு வாக்குகள் உள்ளன.
எனினும் நாங்கள் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை; தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம்” என்றார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய ராமதாஸ் அத்வாலே, “நான் மூன்று முறை எம்பியாக இருந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தமட்டில் அவர் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுப்பவர்.
VIDEO | Bihar: After meeting CM Nitish Kumar in Patna, RPI President Ramdas Athawale (@RamdasAthawale) says, "I have been in Lok Sabha three times. After seeing the vision of PM Modi in 2014, RPI joined NDA. His vision is Sabka Saath, Sabka Vikas. In the last 10 years, the… pic.twitter.com/51YsOFdzJ9
— Press Trust of India (@PTI_News) March 29, 2025
அவர் பிரதமராக வருவதற்கு முன்பு இந்தியா வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அவரைப் பொறுத்தவரை அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறார். அவரது தொலைநோக்கு பார்வை எனக்கு பிடித்துள்ளது.
நாட்டின் பிரதமராக நான்காவது முறையாக நரேந்திர மோடி வருவார். அனைத்து சாதனைகளையும் அவர் முறியடிப்பார்” என்றார். பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு (2025) நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இரு நாள் பயணமாக அமித்ஷா பீகார் சென்றுள்ளார். அவர் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிவார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வக்பு வாரிய திருத்த மசோதா; இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.. அசாதுதீன் ஓவைசி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com