Congress MP Priyanka Gandhi: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி.
Congress MP Priyanka Gandhi: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார் வயநாடு எம்பி பிரியங்கா காந்தி.
Published on: March 29, 2025 at 10:40 pm
வயநாடு மார்ச் 29 2025: கேரள மாநிலம் வயநாட்டில் மக்கள் நலப்பணித் திட்டங்களை அத்தொகுதியின் எம்பியும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (மார்ச் 29 2025) தொடங்கிவைத்தார்.
அப்போது, “மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கிறது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இது தொடர்பாக மேலும் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் வயநாடு எம் பீியுமான பிரியங்கா காந்தி, ” நாடாளுமன்றத்தில் பொதுவாக எந்த ஒரு பிரச்சனைகள் குறித்த விவாதத்தையும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை; நாடாளுமன்றத்தை பொறுத்தவரை ஜனநாயக செயல்முறை செயல்படாமல் இருக்கிறது.
VIDEO | Kerala: “The (central) government is not allowing discussion in Parliament. They are using different methods to not let the democratic process to function. It’s sad for us MPs to see. The opposition used to be accused to sabotage the Parliament but it's new that they… pic.twitter.com/j3ZAEczSzV
— Press Trust of India (@PTI_News) March 29, 2025
ஜனநாயக செயல்முறையை செயல்படுத்தாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் அவர்கள் செய்கிறார்கள். ஒரு மக்களவை உறுப்பினராக எங்களுக்கு இது வருத்தத்தை அளிக்கிறது.
மேலும் அவர்களே ஜனநாயகத்தை செயல்படாமல் தடுத்து விட்டு எதிர் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகின்றனர். ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றன எனக் கூறுகின்றனர்.
மேலும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாசம் செய்கின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தான் நாடாளுமன்றத்தை நாசமாக்குகின்றனர்; ஜனநாயக செயல் முறையை முடக்குகின்றனர்” என்றார்.
வயநாடு எம்பி பிரியங்கா காந்தியின் என்ற பேச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு எம் பீியுமான பிரியங்கா காந்தி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் இதை பேசிவிட்டு காரில் ஏறி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர்தான்.. ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com