முகம் பளபளக்க என்ன ஆயில் பூசலாம்? டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லதா?

Best Oils for Glowing Skin: முகம் பளபளக்க என்ன எண்ணெய் பூசலாம்; டார்க் சாக்லேட் உடலுக்கு நல்லதா என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: July 8, 2026 at 10:26 pm

சென்னை, ஜூலை 8, 2026: முகம் பளபளப்பாக இருக்க ஜோஜோபா எண்ணெய், ரோஸ்ஹிப் எண்ணெய், ஸ்குவாலேன் போன்ற இயற்கை முக எண்ணெய்கள் சிறந்தவை. டார்க் சாக்லேட் (70% காகோவுக்கு மேல்) அளவோடு சாப்பிட்டால் இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, மனநிலை மேம்பாடு போன்ற பல நன்மைகள் தருகிறது.

இந்த எண்ணெய்களை தினமும் முகம் கழுவிய பிறகு சில துளிகள் தடவி, மெதுவாக மசாஜ் செய்தால் தோல் பளபளப்பாகும்.

டார்க் சாக்லேட்டின் நன்மைகள்

இதய ஆரோக்கியம்: டார்க் சாக்லேட் இரத்தக் குழாய்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது; மேலும், கெட்ட கொழுப்பை குறைத்து, ஹெச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. மூளை செயல்பாடு – இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் நினைவாற்றல், கவனம், கற்றல் திறன் மேம்படும்.

கவனிக்க வேண்டியவை

இதில் மிகவும் கவனிக்க வேண்டியது, 70% காகோவுக்கு மேல் உள்ள டார்க் சாக்லேட் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், தினமும் 20–30 கிராம் சாக்லேட் போதுமானது. அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிப்பு, சர்க்கரை அளவு உயர்வு, தூக்கக் குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அமெரிக்காவில் படிப்பு.. இந்தியாவை தேர்வு செய்தது ஏன்? ராதிகா மெர்சென்ட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com