700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன.. 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தேவை.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Warns on MBBS Seats : “700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன” என எச்சரித்துள்ள அன்புமணி ராமதாஸ், “6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Published on: July 8, 2026 at 8:03 pm

சென்னை, ஜூலை 8, 2026: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படுவதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்க வேண்டிய 700 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் ஓரளவு சமாளிக்கக் கூடிய கட்டணத்தில் மருத்துவப் படிப்பை படிக்கும் நல்வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது” என எச்சரித்துள்ளார்.

மேலும், “தனியார் கல்லூரிகளில் இருந்த 700 அரசு ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை இடங்கள் மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் காலப்போக்கில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவது இயல்பானது தான் என்பதால், அதனால் ஏற்படும் மாணவர் சேர்க்கை இடங்களை ஈடுகட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது, ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்குவது போன்றவை தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையிலிருந்து முந்தைய அரசு தவறிவிட்டது.

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நிலைப்பாட்டை வென்றெடுக்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி வருகிறது.

இதை முந்தைய திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திமுக அரசு தொடங்கவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரியே தொடங்காத அரசு என்ற அவப்பெயரை திமுக அரசு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் தேசிய மருத்துவ ஆணையம் விலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாபட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும், 100 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டுமே கொண்டுள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை கூடுதலாக உருவாக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி.. இருவர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com