2 Held in Fake Gold Scam : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Held in Fake Gold Scam : மதுரை TMB வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Published on: July 8, 2026 at 7:06 pm
மதுரை, ஜூலை 8, 2026: மதுரையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.14.05 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்மக்கல் அருகே உள்ள வங்கி கிளையில் தத்தனேரி அனுமார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜி. முத்துப்பாண்டி (52) என்பவர் 2025 நவம்பர் 26 அன்று 94.90 கிராம் எடையுள்ள தங்க மாலையை அடகு வைத்து ரூ.6.80 லட்சம் கடன் பெற்றார். பின்னர் டிசம்பர் 9 அன்று 92.50 கிராம் எடையுள்ள 2 தங்க செயின்களை அடகு வைத்து மேலும் ரூ.7.25 லட்சம் கடன் பெற்றார். இவ்வாறு மொத்தம் ரூ.14.05 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இந்த நகைகளை வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் எஸ். ஜெயபாபு பரிசோதித்து சான்றளித்திருந்தார். ஆனால் வங்கியின் நடைமுறையின்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மறு ஆய்வின்போது, கடந்த ஜூலை 3 அன்று நகைகள் மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து ‘ஆசிட் டெஸ்ட்’ மூலம் பரிசோதனை செய்ததில், அடகு வைக்கப்பட்ட நகைகள் போலியானவை என்பது உறுதியாக தெரியவந்தது.
இதையடுத்து வங்கி நிர்வாகம் முத்துப்பாண்டியை தொடர்பு கொண்டபோது, நகைகளை மீட்டுச் செல்வதாக கூறிய அவர் பின்னர் வங்கிக்கு வரவில்லை. மேலும், பெற்ற கடன் தொகையில் ரூ.4.40 லட்சம் ராஜாராம் என்பவரின் வங்கி கணக்கிற்கும், ரூ.4.45 லட்சம் கரூர் வைசியா வங்கியின் ஞானஒளிபுரம் கிளையில் சுகுமாறன் என்பவரின் கணக்கிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வங்கி தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் திலகர்திடல் காவல் நிலைய போலீசார் பி.என்.எஸ் பிரிவு 318(4)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலி நகைகளை அடகு வைத்து வங்கியை ஏமாற்றியதாக ஜி. முத்துப்பாண்டி மீதும், போலி நகைகளை அடையாளம் காணத் தவறியதாக மதிப்பீட்டாளர் எஸ். ஜெயபாபு மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது இருவரும் போலீசாரின் விசாரணையில் உள்ளனர்.
இதையும் படிங்க : சென்னையில் பிரபல ரவுடி நாய் மணிகண்டன் தப்பியோட்டம்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com