டெல்லியில் கனமழைக்கு வாய்ப்பு.. ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு!

Heavy Rain Alert for Delhi : டெல்லியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: July 8, 2026 at 11:51 am

புதுடெல்லி, ஜூலை 8, 2026: டெல்லி-என்சிஆர் பகுதியில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது. கனமழையால் குர்கானில் போக்குவரத்து மிகவும் மந்தமாக நகர்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்கள் சிக்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகள் தவிர வெளியில் செல்லாமல் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பருவமழை கடுமையாக தாக்கி வருகிறது. ஜூலை 1 முதல் பால்கர் மாவட்டத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், ஜல்கான் மாவட்டத்தில் அமல்னர் அருகே தண்ணீர் நிரம்பிய கல் குவாரியில் மூன்று பதின்ம வயதினர் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ‘செல்ஃபி’ எடுக்க முயன்றபோது வழுக்கி விழுந்ததே விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் பருவமழைக் காலத்தில் மரங்கள் விழுவதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய மாநகராட்சி (BMC) முடிவு செய்துள்ளது. சாலைகளில் கான்கிரீட் தளம் அமைப்பது மரங்களின் வேர்களை பலவீனப்படுத்துகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த ஒரு வாரத்தில் மரம் விழுந்த சம்பவங்களில் 11 வயது பள்ளி மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.

பருவமழைக்கு முன் ஆயத்தப் பணிகளை மேம்படுத்தும் வகையில், ஜனவரி மாதம் முதல் கழிவுநீர் பாதையின் ஆய்வுத் துளைகளை பராமரித்து, வரைபடம் தயாரிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தாயின் பெயரில் ஒர் மரம்.. டெல்லியில் 70 லட்சம் மரக்கன்றுகள் நடவு.. அமித் ஷா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com