Kayadu Lohar: தாம் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகை என தெரிவித்துள்ள நடிகை கயாடு லோகர், அவருடன் இணைந்து நிச்சயமாக திரைப்படம் ஒன்றில் நடிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Kayadu Lohar: தாம் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகை என தெரிவித்துள்ள நடிகை கயாடு லோகர், அவருடன் இணைந்து நிச்சயமாக திரைப்படம் ஒன்றில் நடிப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Published on: July 8, 2026 at 11:31 am
சென்னை ஜூலை 8, 2026 – பிரபல நடிகை கயாடு லோகர் தாம் சிம்புவின் தீவிர ரசிகை என தெரிவித்துள்ளார். அவர் சிம்புவுடன் இணைந்து திரைப்படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். சிம்புவின் நடிப்பு, அவரது தனித்துவமான கவர்ச்சி, ரசிகர்களை ஈர்க்கும் திறன் ஆகியவை தான் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அதனால் தான் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கனவே இருமுறை சிம்புவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்கள் ட்ராப் ஆகிவிட்டன. எனவே அந்த கனவு நிறைவேறவில்லை. ஆனால் நான் எப்போது அவருடன் நடிப்பேன் என ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
அவர் மேலும், “நிச்சயமாக நான் சிம்புவுடன் இணைந்து நடிப்பேன். தற்போது இந்த விவகாரத்தை நான் யூனிவர்சிடம் விட்டுவிட்டேன். விதி எப்போது அந்த வாய்ப்பை தருகிறதோ அப்போது நான் அவருடன் இணைந்து திரையில் தோன்றுவேன்” என்றார்.
கயாடு லோகரின் இந்த கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. சிம்புவின் ரசிகர்கள் கயாடு லோகர் கூறிய இந்த நம்பிக்கை நிறைந்த உரையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிம்புவுடன் அவர் இணைந்து நடிக்கும் நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க; ஆமிர் கான், கௌரி ஸ்ப்ராட் திருமணம்.. மும்பையில் நடந்தது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com