திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Published on: June 30, 2026 at 5:35 pm

சென்னை, ஜூன் 30, 2026: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “எனது அரசியல் முடிவை மக்களின் விருப்பப்படியே எடுப்பேன். இப்போதைக்கு மக்கள் சேவையே எனது முதல் இலக்கு” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஜூன் 30, 2026) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.

அதில், “செய்தியாளர் சந்திப்பில் பேசிய பின், நான் மக்களை பற்றி தவறாக பேசியதாக கருத்து பரவியது. ஆனால் நான் அப்படி பேசவில்லை. இதற்காகவே சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்தேன். பின்னர் நண்பர்கள், அறக்கட்டளை குழந்தைகள், எனது தாயார் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். அப்போது தான் இந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு புரிந்தது” என்று கூறினார்.

அவர் மேலும், “என்னை நம்பி வாழ்ந்த ராஜகோபாலை பார்த்து கொள்கிறேன் என்றால், மக்களை பற்றி நான் தவறாக பேசுவேனா? எனது தாயார் இதற்காக தான் அரசியல் வேண்டாம் என்றேன் என அழுதார். எனக்கு தாயார் தான் தெய்வம். மக்கள் அறக்கட்டளையின் மூலமாக சேவை செய்வதே போதும், அரசியல் தேவையில்லை” என வலியுறுத்தினார்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அவர், “பலர் நான் போட்டியிட்டால் வாக்களிக்கிறோம் என கூறுகின்றனர். ஆனால் முதலமைச்சர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்கே வாக்களிக்கின்றனர். எனவே நான் வேட்பாளராக நிற்பது தர்மம் இல்லை. தவெகவில் சேர்ந்தால் உறுப்பினராக உழைப்பேன். பின்னர் முதலமைச்சர் பார்த்து பதவி கொடுத்தால் அதன்மூலம் சேவை செய்வேன்” என்றார்.

அவர் தனது வீடியோவில், “கருணாநிதி, உதயநிதி, அன்புமணி, விஜய் ஆகியோரிடம் உதவி கேட்ட போது அனைவரும் உதவி செய்தனர். எனவே மக்கள் சேவையே எனது முதல் இலக்கு. அரசியல் தேவையில்லை” என்று கூறி, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க : சிங்கம், புலி, மயில்.. இதெல்லாம் ரவீனா எடுத்த படங்களா? ரசிகர்கள் வியப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com