ஆளுநரை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

Minister Viswanathan Explains : ஆளுரை சந்தித்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.

Published on: June 30, 2026 at 5:10 pm

சென்னை, ஜூன் 30, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் 52 மரக் கன்றுகள் நடும் விழா, ரத்த தான முகாம் மற்றும் உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் நான் மரியாதை நிமித்தமாக நேற்று (ஜூன் 29) சந்தித்தோம்” என்றார். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆளுநரை சந்திப்பது மரபாக இருப்பதால், அந்த மரபின் அடிப்படையில் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேரிலும் சந்தித்து நன்றி தெரிவித்ததாக அமைச்சர் விளக்கினார். அப்போது, இனி வரும் காலங்களில் மக்கள் பிரச்சனைகளை ஜனநாயக முறையில் சட்டப் பேரவையில் விவாதிக்க உள்ளோம் என்று ஆளுநரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அதற்கு பதிலளித்த ஆளுநர் அர்லேகர், “இந்த அரசு சிறப்பான அரசு, மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தவெக அரசுக்கு வாழ்த்துகள். வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடர் மிகச் சிறப்பாக நடக்கும். அதற்கு என்னுடைய முழு ஆதரவை தருவேன்” என்று பாராட்டியதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தி.மு.க, பா.ஜ.க கூட்டணியா? இஸ்லாம் மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லையா? தமிமுன் அன்சாரி கொந்தளிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com