M. Thamimun Ansari : தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்று திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
M. Thamimun Ansari : தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்று திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Published on: June 29, 2026 at 7:34 pm
திருச்சி, ஜூன் 29, 2026: மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, தேர்தலில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று எந்தவிதத்திலும் தி.மு.க தங்களை நிர்பந்திக்கவில்லை என்றும், தனி சின்னம் இல்லாத சூழலில் சுயேட்சை சின்னம் கிடைக்க தாமதமாகி தேர்தல் வெற்றியை பாதிக்கக்கூடும் என்பதால், தலைமை நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
தனி சின்னம் இருந்திருந்தால் அதில் நின்றிருப்போம் என்றும், கொள்கை கோட்பாடுகள் கொண்ட தங்களுக்கு த.வெ.க கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கட்சியிலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்தவர்களை “வேடந்தாங்கல் பறவைகள்” என்று விமர்சித்ததோடு, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் தியேட்டர்களில் அலைமோதுவது போல த.வெ.கவில் சேர பனையூர் பங்களா வாசலில் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், தி.மு.க – பா.ஜ.க கூட்டணி என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி மட்டுமே என்றும், தி.மு.கவை தனிமைப்படுத்துவதற்காக குறிப்பாக டெல்லியிலிருந்து இத்தகைய செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் மறுத்தார். பா.ஜ.கவின் நிழல் பக்கம் கூட தி.மு.க செல்லாது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும், இந்தியா கூட்டணியை காங்கிரஸ் கட்சி கவனத்தோடு வழிநடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பி.சி.எம் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்ற தீர்ப்பு மத வெறியைக் காட்டுவதாகவும், அவரது தீர்ப்புகள் வஞ்சகமும் வன்மமும் நிறைந்ததாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இஸ்லாமியர்களைச் சார்ந்த வழக்குகள் தொடர்ந்து அவரிடமே செல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இனி ஜாதி, மதம் தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : ‘விஜய்க்கு இஸ்லாமியர்கள் ஆதரவு.. என் வாழ்நாளில் பார்த்திராதது’.. காதர் மொகிதீன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com