அண்ணாமலைக்கு எதிரான வழக்கு.. வாபஸ் வாங்கிய டி.ஆர் பாலு.. பின்னணி என்ன?

TR Baalu Withdraws : அண்ணாமலைக்கு எதிரான வழக்கை தி.மு.க.வின் டி.ஆர். பாலு வாபஸ் வாங்கினார்.

Published on: June 30, 2026 at 5:48 pm

சென்னை, ஜூன் 30, 2026: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திமுக பொருளாளர் மற்றும் எம்.பி. டி.ஆர். பாலு திரும்ப பெற்றுள்ளார். 2023 ஏப்ரல் 14 அன்று அண்ணாமலை, ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டார். இதனால், தனது குடும்பத்தினருக்கு தொடர்பில்லாத நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தவறான குற்றச்சாட்டு சாட்டியதாகக் கூறி, டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில், “எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் 3 நிறுவனங்களில் மட்டுமே சிறிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.மற்ற நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” என டி.ஆர். பாலு விளக்கம் அளித்திருந்தார். மேலும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தன்னிடம் ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு 2023 முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தி, தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். பாஜகவிலில்லாத நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என டி.ஆர். பாலு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 15 நாட்களாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடந்து வந்த நிலையில், இன்று (ஜூன் 30, 2026) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு வழக்கை திரும்ப பெறும் மனுவை தாக்கல் செய்தார். இதனால், சுமார் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க : ரயில் பயணத்தில் சுவாரஸ்யம்.. அமைச்சர் ரமேஷ் – கி. வீரமணி சந்திப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com