மேகதாது அணை விவகாரம்.. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா? காங்கிரஸூக்கு பா.ஜ.க கேள்வி

Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

Published on: July 8, 2026 at 11:25 am

சென்னை, ஜூலை 8, 2026: தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு மேகேதாட்வில் அணைக்கட்ட ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்கமாட்டோம்; அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.மாணிக்கம் தாகூர் முழங்கியிருப்பது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாக பேசப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாடெங்கும் தலைவிரித்தாடிய இலஞ்சம் லாவண்யத்தால் படுதோல்வியடைந்து, பதவியிழந்து, பரிதாபமாக நிற்கும் காங்கிரஸ். இப்பொழுது இலஞ்சம்பற்றி சாத்தான் வேதம் ஓதுவதுப்போல், ஓதிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது காங்கிரஸ் ஆதரவுடன் தமிழகத்தில் நடந்துவரும் தவெக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துவிட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞர் தேர்வுக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும், மாற்றுகட்சி எம்எல்ஏ க்களை விலைக்கு வாங்க பலகோடி ரூபாய் கொடுக்கப் பட்டிருப்பதாகவும், ஊடகங்களிலும், தவெக நிர்வாகியிடமிருந்தும் செய்திகள் வருகின்றன.

ஊழலை ஒழிக்க திடீர் அவதாரம் எடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் தாகூர், தனது நெஞ்சை நிமிர்த்தி, அச்சம் தவிர்த்து தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : தி.மு.க ஆட்சிக் காலத்தில் விடப்பட்ட 5 டெண்டர் ரத்து.. தமிழ்நாடு அரசு உத்தரவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com