Asaduddin Owaisi: வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் இவர்களை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அசாதுதீன் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
Asaduddin Owaisi: வக்பு வாரிய திருத்த மசோதா விவகாரத்தில் இவர்களை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என அசாதுதீன் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
Published on: March 29, 2025 at 7:34 pm
Updated on: March 29, 2025 at 9:21 pm
புதுடெல்லி மார்ச் 29 2025: ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி இன்று (மார்ச் 29 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ” மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லை; ஆகவே, வக்பு வாரிய திருத்த மசோதா விகாரத்தில் இவர்களை இஸ்லாமியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய அசாதுதீன் ஓவைசி, ” வக்பு வாரிய திருத்த மசோதா இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று. இந்தக் கேள்வியை தான் நான் முன் வைக்கிறேன்.
எனது கேள்வி என்னவென்றால், இந்திய அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு சட்டத்தை உருவாக்க போகிறீர்கள். இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14, 26, 25, 29 ஆகியவற்றை கடுமையாக மீறுகிறது. மேலும் இந்த மசோதா மசூதிகள் மற்றும் தர்காக்கள் மீதான தாக்குதல் எனவும் நான் கூறுவேன்.
இதையெல்லாம் நாம் பார்க்கும் போது இந்த மசோதா வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாப்பது போன்று தெரியவில்லை. மாறாக இது அவர்களின் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனைக்கு ஆதரவாக உள்ளது.
மக்களவையை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆகவே அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரின் ஆதரவு தேவை.
VIDEO | Strongly opposing the Waqf Amendment Bill, AIMIM President Asaduddin Owaisi (@asadowaisi) says, "The question is you are going to make an unconstitutional law, which is in grave violation of Article 14, 26, 25, 29 of the Constitution. The BJP don't have the majority in… pic.twitter.com/fzJRIn29Va
— Press Trust of India (@PTI_News) March 29, 2025
நாடு முழுவதிலும் வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படக்கூடாது. நான் ஏற்கனவே கூறியது போல் இந்த மசோதா நிறைவேற சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரின் ஆதரவு தேவை. இவர்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இவர்களை ஒருபோதும் இஸ்லாமியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
வக்பு வாரிய திருத்த மசோதாவை யாரும் கண்மூடித்தனமாக ஆதரவு அளிக்கக் கூடாது” என்றார். மத்தியில் பாரதிய ஜனதா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்யும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் பொதுக்குழுவிலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பணக்கார நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி: வங்கித் துறை பாதிப்பு.. பா.ஜ.க மீது ராகுல் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com