Ganja dealer shot dead: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளி மீது போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Ganja dealer shot dead: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளி மீது போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Published on: March 29, 2025 at 6:02 pm
Updated on: March 30, 2025 at 8:35 pm
தேனி மார்ச் 29, 2025: தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்லபட்டியைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமார். 34 வயதான இவர் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரை கஞ்சா வியாபாரி என அறியப்படும் பொன்வண்டு என்ற பொன்வண்ணன் என்பவர் வியாழக்கிழமை ( மார்ச் 27 2025) கல்லால் தாக்கி படுகொலை செய்தார். தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் காவலர் முத்துக்குமாரின் நண்பர் ராஜாராம் என்பவரும் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட பொன்வண்டு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் பொன்வண்டு தேனி கம்பம் அருகே உள்ள தனது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த கஞ்சா வியாபாரி என அறியப்படும் பொன்வண்டு போலீசாரை தாக்கி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார். இதை எடுத்து போலீசார் அவரை சுட்டுப் பிடிக்க முயன்றனர். அப்போது துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் பொன்வண்டு பலத்த காயமுற்றார். தற்போது பொன்வண்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
போலீசாரை தாக்கி கொலை செய்த கஞ்சா வியாபாரி பொன்வண்டு மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கஞ்சா வியாபாரி பொன்வண்டு என்ற பொன்வண்ணன் சிறைக்குச் சென்று திரும்பியவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை.. கனிமொழி ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com