Kanimozhi MP: திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை எனக் கூறிய எம்பி கனிமொழி, எல்லோரும் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள் என்றார்.
Kanimozhi MP: திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை எனக் கூறிய எம்பி கனிமொழி, எல்லோரும் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள் என்றார்.
Published on: March 29, 2025 at 5:48 pm
புதுடெல்லி மார்ச் 29 2025: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சியின் முதல் பொதுக்குழுவை மார்ச் 28 2025 வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்தப் பொதுக்குழுவில் நடிகர் விஜய் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை முன் வைத்தார்.
நடிகர் விஜய்க்கு முன்னதாக பேசிய கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு வலை விரித்தார். அக்கட்சியினர் தங்களது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது போல் அவரது பேச்சு இருந்தது. மேலும் திருமாவளவன் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
திமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை நடப்பதாக குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா, தமிழகமே யார் அந்த சார் என அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பிரச்சனையை திசை திருப்பினார் எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொது குழுவில் திமுகவுக்கு எதிராக விஜய் பேசியது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்கள் கனிமொழி இடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கனிமொழி, ” திமுகவுக்கு போட்டியாக யாரும் இல்லை; எல்லோரும் திமுகவை தான் போட்டியாக கருதுகின்றனர்” என்றார்.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரிகிறது” என்றும் கனிமொழி பதிலளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என நடிகர் விஜய் பேசியிருந்த நிலையில் கனிமொழி இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்துகிறார்; அமைச்சர் சக்கரபாணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com