Sengottaiyan meets Amit Shah in Delhi: அதிமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏவமான செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து பேசினார்.
Sengottaiyan meets Amit Shah in Delhi: அதிமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏவமான செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷாவை ரகசியமாக சந்தித்து பேசினார்.
Published on: March 29, 2025 at 5:30 pm
சென்னை மார்ச் 29 2025: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். இவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறையை கவனித்து வந்தார்.
இவர் டெல்லியில் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனித்தனியே சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, “நான் இதுகுறித்து அறிந்திருக்கவில்லை” என பொருள்படும்படி பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டை எனக்கும் இடையே சமீபகாலமாக விரிசல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சலசலப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
குறிப்பாக டாஸ்மாக் ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி இதையே முன் வைத்தார்.
எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து மேலும் சில அதிமுகவின் மூத்த தலைவர்கள் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார்கள். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை மேலும் கூட்டி உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொற்கால ஆட்சி நடத்துகிறார்; அமைச்சர் சக்கரபாணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com