‘நான் சங்கியோ, கம்மியோ அல்ல’.. நடிகை ஸ்வேதா மேனன்!

Shweta Menon: “நான் யாருடைய கைப்பாவையும் இல்லை; சுயமரியாதைக்கு முன்னுரிமை கொடுத்தேன்” என நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.

Published on: June 25, 2026 at 7:56 pm

திருவனந்தபுரம், ஜூன் 25, 2026; மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான அம்மா-விலிருந்து விலகிய தனது முடிவை நடிகை ஸ்வேதா மேனன் விளக்கி, “நான் யாருக்கும் கைப்பாவையாக இருக்க மறுத்தேன்; பதவியை விட சுயமரியாதைக்கே முன்னுரிமை அளித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 21 அன்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையையடுத்து, அவர் மற்றும் 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் ராஜினாமா செய்தனர்.

ஸ்வேதா மேனன், தனது ராஜினாமாவுக்குப் பிறகு, சிலர் அவதூறுப் பிரச்சாரம் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
மலையாள சினிமா சங்கத் தேர்தலுக்கு முன்பே, தனக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரங்கள் நடந்ததாகவும், இருந்தபோதிலும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், முந்தைய குழு உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதிலிருந்து சில சுயநல சக்திகள் தங்கள் குழுவைத் தடுத்ததாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த தடயவியல் தணிக்கை அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர், “அடிப்படையற்ற அவதூறுகளையும் தனிப்பட்ட அவமதிப்புகளையும் தொடர்ந்து எதிர்கொள்ள நேர்ந்ததால், கொள்கைப்பிடிப்புள்ள பெண்ணாக அம்மா சங்க அமைப்பிலிருந்து விலக முடிவு செய்தேன்” என்று அவர் கூறினார்.

தனது அரசியல் சாய்வு குறித்த யூகங்களை மறுத்த அவர், “நான் சங்கி (பா.ஜ.க)யோ கம்மி (கம்யூனிஸ்ட்)யோ அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து, மத்திய பாஜக அரசு அல்லது மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ஒருபோதும் கலந்துகொள்ளவில்லை என்றும், தனது முடிவு பலவீனத்தால் எடுக்கப்பட்டதல்ல; அது சுயமரியாதையின் வெளிப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; ஹாலிவுட் போல் இந்திய சினிமா இல்லை.. பிரியங்கா சோப்ரா சந்தித்த நெகடிவ் கமெண்ட்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com