நடிகர் நிவின் பாலி மீதான மோசடி வழக்கு ரத்து.. கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!

Nivin Pauly Cheating Case Quashed: நடிகர் நிவின் பாலி மீதான மோசடி வழக்கை ரத்து செய்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: October 29, 2026 at 12:26 pm

கொச்சி, அக்.29, 2026: மலையாள நடிகர் நிவின் பாலி மீது திரைப்படத் தயாரிப்பாளர் அளித்த நிதி மோசடி புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி பி.வி. பாலகிருஷ்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நிவின் பாலி நடித்த மகாவீர்யர் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரான பி.எஸ். ஷம்னாஸ், திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். மேலும், ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 திரைப்படத்தில் இணைத் தயாரிப்பாளராக வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, பின்னர் வெளிநாட்டு விநியோக உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, தயாரிப்பாளர் ஷம்னாஸ் தனது கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தியதாக நிவின் பாலியும் தனியாகப் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இரு தரப்பினரும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றச்சாட்டுகள் தீவிரமானவை அல்ல என்றும், வழக்கைத் தொடர்ந்து நடத்துவதால் பயனில்லை என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான வழக்கையும், தயாரிப்பாளர் ஷம்னாஸ் மீதான தொடர்புடைய வழக்கையும் ரத்து செய்தது.

இதையும் படிங்க : ஜி.வி. பிரகாஷின் ‘இம்மோர்டல்’ அக். 30-ல் ஓடிடியில் வெளியீடு.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com