Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Published on: October 29, 2026 at 1:00 pm
சென்னை, அக்.29, 2026: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படம், கனடாவில் நடைபெறவுள்ள 12-வது இந்தியத் திரைப்பட விழா ஆஃப் ஆல்பர்ட்டா (IFFA) 2026-க்குத் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், ஜோஸ், ஹரி, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
1986-ஆம் ஆண்டு சென்னையைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அச்சப்படும் குணம் கொண்ட சிறுவன் ஒருவன், அச்சத்தை ஏற்படுத்தும் குற்றவாளி ஒருவரை பள்ளிக் கழிவறையில் பூட்டி வைப்பதால் ஏற்படும் எதிர்பாராத நட்பை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்தத் திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி மாலை 7 மணிக்கு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எட்மண்டனில் உள்ள லேண்ட்மார்க் சினிமாஸ் சிட்டி சென்டரில் திரையிடப்பட உள்ளது. விஜய் சேதுபதியின் திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவில் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : நடிகர் நிவின் பாலி மீதான மோசடி வழக்கு ரத்து.. கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com