மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. தீபாவளி பரிசு அறிவிப்பு!

3% DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 29, 2026 at 12:50 pm

புதுடெல்லி, அக்.29, 2026: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (டி.ஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டி.ஆர்) உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த முடிவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த உயர்வு மூலம், அடிப்படைச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் கணக்கிடப்படும் அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அதிகரிக்கிறது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் சுமார் 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என மொத்தம் 1.17 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். விலைவாசி உயர்வின் தாக்கத்தைக் குறைத்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதே இந்த உயர்வின் நோக்கமாகும்.

இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,016 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி காலாண்டு லாபம் ரூ.451 கோடியாக உயர்வு. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com