விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை நான்.. நடிகை அனிஷ்மா அனில்குமார்

Vijay Sethupathi: அனிஷ்மா அனில்குமார், நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் சந்தித்தபோது, அவரிடம் தனது நீண்ட நாள் ரசிகை என்ற உணர்வை நேரில் தெரிவிக்க நினைத்ததாக கூறியுள்ளார்.

Published on: October 6, 2026 at 2:32 pm

சென்னை, அக்.6, 2026: அனிஷ்மா அனில்குமார், நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் சந்தித்தபோது, அவரிடம் தனது நீண்ட நாள் ரசிகை என்ற உணர்வை நேரில் தெரிவிக்க நினைத்ததாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தில் அவர் நடித்த கதிரவன் கதாபாத்திரத்தை மிகவும் விரும்புவதாகவும், அந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி நடித்த பாண்டி, மைக்கேல், காந்தி, ராம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் அவரை சந்தித்தபோது நினைவுக்கு வந்ததாக அனிஷ்மா குறிப்பிட்டுள்ளார். ஒரு நடிகராக விஜய் சேதுபதியின் பயணம் தனக்கு நம்பிக்கையை அளித்ததுடன், தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்தபோது தான் சொல்ல நினைத்ததில் பாதியைக் கூட கூற முடியாமல் உறைந்துபோனதாக அனிஷ்மா தெரிவித்துள்ளார். அவரிடம் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு, சிரித்தபடி நின்றதாகவும், தனது மனதில் இருந்த உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, அனிஷ்மா நடித்த ‘சிறை’, ‘யூத்’, ‘மோத ராத்திரி’ ஆகிய படங்கள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன. ‘மோத ராத்திரி’ படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிய பின்னர் தானும் அனிஷ்மாவும் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும், படப்பிடிப்பு தளத்தில் அனிஷ்மா அளித்த ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி தெரிவித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க : கார்த்தி நடிப்பில் சர்தார்-2 ஒ.டி.டி.வெளியீடு.. எந்தத் தளம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com