Mallikarjun Kharge: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், 3 முக்கிய குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
Mallikarjun Kharge: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், 3 முக்கிய குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

Published on: October 6, 2026 at 2:42 pm
புதுடெல்லி, அக்.6, 2026: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், 3 முக்கிய குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அரசியல் விவகாரக் குழு, ஆலோசனைக் குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரக் குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.மாணிக்கம் தாகூர், எஸ்.ஜோதிமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 48 பேர் கொண்ட மாநில காங்கிரஸ் ஆலோசனைக் குழுவில் ப.சிதம்பரம், ஏ.செல்லக்குமார், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
7 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கே.ஆர்.ராமசாமி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயக்குமார் எஸ்.எஸ்., ராமசுப்பு, யு.பாலராமன், ஆர்.என்.பழனியசாமி, சுதா ராமகிருஷ்ணன் மற்றும் அமீர் கான் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 3 குழுக்களும் தமிழக காங்கிரஸின் அரசியல் செயல்பாடுகள், உள்கட்சி நிர்வாகம் மற்றும் ஒழுங்கு சார்ந்த விவகாரங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதையும் படிங்க : ரிலையன்ஸ் நிர்வாகிக்கு ராஜ்ய சபா சீட்.. புயலை கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com