Sai Prithviraj: “விஜய் சேதுபதி சார் என் நண்பர்; ஆனால் எப்போதும் அவர்தான் என் ஹீரோ” என சிறுவன் சாய் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
Sai Prithviraj: “விஜய் சேதுபதி சார் என் நண்பர்; ஆனால் எப்போதும் அவர்தான் என் ஹீரோ” என சிறுவன் சாய் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

Published on: October 28, 2026 at 1:23 pm
சென்னை, அக்.28, 2026: நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘பாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ள சிறுவன் சாய் பிரித்விராஜ், அவருடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். தனது சகோதரியைப் படப்பிடிப்பு தேர்வுக்கு அழைத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாகத் தனக்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
‘பாத்தா’ படத்தில் சபரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பிரித்விராஜ், முதன்முதலில் கேமரா முன்பு நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆரம்பத்தில் பயந்ததாகவும், பின்னர் அவர் நண்பரைப் போலப் பழகி, கேமராவை எதிர்கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி தன்னைச் சிரிக்க வைத்து இயல்பாக நடிக்க உதவியதாகக் கூறிய சாய், அவருடன் பைக்கில் பயணம் செய்த காட்சி தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். “விஜய் சேதுபதி சார் எனது நண்பராகிவிட்டார். ஆனால், அவர் எப்போதும் எனது ஹீரோவாகவே இருப்பார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நடிப்புடன் படிப்பிலும் கவனம் செலுத்த விரும்பும் சாய் பிரித்விராஜ், நடிகர் விஜய்யைப் போலச் சிறந்த நடிகராகவும், தமிழக முதலமைச்சராகவும் வர வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷின் மகனாக நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க : ஷாருக்கானின் ‘கிங்’ பட போஸ்டர் சர்ச்சை: ‘துரந்தர் 2’ படத்துடன் ஒப்பிட்டு விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com