ஜி.வி. பிரகாஷின் ‘இம்மோர்டல்’ அக். 30-ல் ஓடிடியில் வெளியீடு.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்!

GV Prakash Immortal OTT Release: ஜி.வி. பிரகாஷின் ‘இம்மோர்டல்’ திரைப்படம் அக். 30-ல் ஓடிடியில் வெளியாகிறது.

Published on: October 28, 2026 at 2:13 pm

சென்னை, அக்.28, 2026: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ‘இம்மோர்டல்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில், கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காதல், மர்மம் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. குறைந்த வாடகையில் தங்குவதற்கு இடம் தேடும் மகி என்ற இளைஞர், சிந்து என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கிறார். அதன்பிறகு அவர் எதிர்கொள்ளும் விசித்திரமான சம்பவங்களும், அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களுமே படத்தின் கதையாக அமைந்துள்ளன.

ஏ.கே. ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் அருண்குமார் தனசேகரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ராஜேஷ் எம். படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தற்போது இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : “விஜய் சேதுபதி சார் என் நண்பர்; ஆனால் எப்போதும் அவர்தான் என் ஹீரோ” – சிறுவன் சாய் பிரித்விராஜ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com