மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம்? த.வெ.க அரசு அதிரடி

Free Bus Travel for Disabled Persons: மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Published on: October 29, 2026 at 12:16 pm

Updated on: October 29, 2026 at 12:17 pm

சென்னை, அக்.29, 2026: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயணச் சலுகையை விரிவுபடுத்தி, கூடுதல் வகை அரசுப் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட அரசாணையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட, தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID) வைத்திருப்பவர்கள் நகர்ப்புற மற்றும் மாநகரப் பகுதிகளில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். (LSS), டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். மேலும், புறநகர் சாதாரணப் பேருந்துகளிலும் மலைப்பாதைகளில் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகளின்படி இந்தச் சலுகை வழங்கப்படும்.

சுயமாகப் பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒருவரைத் துணையாக அழைத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேவை வழங்கப்படும் மற்றும் சேவை வழங்கப்படாத பகுதிகளுக்கு ஏற்ப பயணத் தூர வரம்புகள் முறையே 35 கி.மீ. மற்றும் 40 கி.மீ. என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறைகளைத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உரிய விதிமுறைகளின்படி செயல்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயணம் செய்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தாக்கல்.. 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com