அனைத்து சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள்.. தமிழ்நாடு அரசு

Tamil Nadu Prisons Armed Security: தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Published on: October 29, 2026 at 11:06 am

Updated on: October 29, 2026 at 11:09 am

சென்னை, அக்.29, 2026: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாவட்ட சிறைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதனை சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சிறைகளில் உள்ள கண்காணிப்புக் கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். கைதிகள் தப்பிச் செல்ல முயன்றால், அவர்களைத் தடுக்கத் தேவைப்படும் சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தவும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில், கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறியதை நம்பி காவலர்கள் கதவுகளைத் திறந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால், காவலர்களைத் தாக்கிய கைதிகள் 17 பேர் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சிறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும், அனைத்து சிறைகளிலும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரம் முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கை முடிந்ததும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும் அமல்படுத்தப்பட உள்ளன.

இதையும் படிங்க : வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கு.. KN நேரு சகோதரர்களின் மனுக்கள் தள்ளுபடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com