Theni Jailbreak : தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Theni Jailbreak : தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 27, 2026 at 4:08 pm
Updated on: October 27, 2026 at 5:01 pm
தேனி, அக். 27 2026: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 26ஆம் தேதி இரவு, கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சிறைக் காவலர்களை அழைத்து, அவர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் காவலர் தங்கபாண்டி உள்ளிட்ட மூன்று சிறைப் பணியாளர்கள் காயமடைந்தனர். இதில் தங்கபாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, தப்பிய கைதிகளைப் பிடிக்க காவல்துறை சார்பில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேனி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வாகனச் சோதனைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டன.
தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் தப்பியோடிய 17 கைதிகளில் 4 பேரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். எஞ்சிய 13 கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க நீதிமன்ற காவலில் அன்பில் மகேஷ்.. அடுத்து என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com