DMK MLA Summoned by Police : முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
DMK MLA Summoned by Police : முதல்வர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Published on: November 12, 2026 at 2:21 pm
சென்னை, நவ.12, 2026: தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியதாக எழுந்த புகாரில், திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மீது சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில், உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பேசிய துரை சந்திரசேகர், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு துரை சந்திரசேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com