ipl 2026: ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராதை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது பெங்களூரு அணி.
ipl 2026: ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராதை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது பெங்களூரு அணி.

Published on: June 1, 2026 at 1:13 pm
அகமதாபாத், ஜுன் 1 2026: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் மட்டும் போராடி அரைசதம் அடித்தார்.
தொடக்க வீரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினர். RCB தரப்பில் ரசிக் தார் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேஸில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
விராத் கோலி அரைசதம்
156 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேலும், தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தையும் அவர் பதிவு செய்தார். வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களும், டிம் டேவிட் 24 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
கோப்பையை தக்க வைத்த ஆர்சிபி
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார். போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஜத் பட்டிதார், அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் ஆண்டி பிளவரின் பங்கு மிக முக்கியமானது என்றும், அடுத்த சீசனிலும் கோப்பையை வெல்லும் இலக்குடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்கம் நீங்கதான் இனி சுகாதார தூதர்.. சூர்யவன்ஷியை கௌரவித்த ஜார்க்கண்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com