திருச்செங்கோடு துயரம்.. தேர்ச்சக்கரத்தில் சிக்கிய மாணவர்!

Thiruchengode Tragedy: திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கிய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்; இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 1, 2026 at 1:31 pm

நாமக்கல், மே 31, 2026: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் தேர் திருவிழாவில், கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் (18) தேரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தேர்த்திருவிழா, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது குறுகிய வளைவில் தேர் திரும்பியபோது விபத்து நிகழ்ந்தது.

இதில், ஹர்ஷவர்தன் தேரின் சக்கரத்துக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்தார். அதேபோல் சஷ்டிகன் (19) என்பவரும் சிக்கி காயமடைந்தார். இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் ஹர்ஷவர்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமைச்சர் ஆறுதல்

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதற்கிடையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன். நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com