Vijays Thank‑You Meet in Trichy : தமிழக முதலமைச்சர் விஜய், 2026 ஜூன் 1ஆம் தேதி திருச்சி செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Vijays Thank‑You Meet in Trichy : தமிழக முதலமைச்சர் விஜய், 2026 ஜூன் 1ஆம் தேதி திருச்சி செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 30, 2026 at 8:01 pm
சென்னை, மே 30, 2026: முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் ஜூன் 1ஆம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார். அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கில் அவர் 91,381 வாக்குகள் பெற்று, 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பின், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தொடர்ந்து சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ராஜினாமா செய்திருந்தாலும், திருச்சி கிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 1 மாலை ஜோசப் கல்லூரி மைதானத்தில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பொதுக்கூட்டத்திற்கான பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : புதிய குடும்ப அட்டைகள் எப்போது கிடைக்கும்? அமைச்சர் வெங்கடரமணன் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com