புதிய குடும்ப அட்டைகள் எப்போது கிடைக்கும்? அமைச்சர் வெங்கடரமணன் பதில்

New Ration Card: புதிய குடும்ப அட்டைகள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பு, ரேஷன் அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்த குடும்ப நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Published on: May 30, 2026 at 7:56 pm

சென்னை, மே 30, 2026: சென்னை காமராஜர் சாலையில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பின் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நியமனம் செய்வோம் என்றும் தெரிவித்தார்.

புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு மாதத்திற்குள் குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முதியவர்களுக்கு வீடு தேடி சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டம் குறித்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை என்றும், புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து தேங்காய், ராகி போன்ற பொருட்களை வாங்கி பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ரேசன் பொருட்கள் பதுக்கல் இருந்தால் தகவல் அளிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீட்டு உபயோக தண்ணீர் கேன்களின் தூய்மையின்மை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சென்னை வண்ணாரப்பேட்டை நியாயவிலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து அமைச்சர் வெங்கடரமணன், அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை உரிய தரம், எடையுடன் வழங்க வேண்டும் என்றும், உப்பு, சோப்பு போன்ற பொருட்களை வாங்க மக்களை நிர்பந்திக்கக் கூடாது என்றும், கடை மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க : தென்காசி–திருநெல்வேலியில் முகமூடி கும்பல் தாக்குதல்: 8 பேர் கைது

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!
Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்!
Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்
Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com