‘தாய்மாமன்’ தங்க மோதிரம் திட்டம்… 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல்; டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு

Thaimaman Gold Ring Project : ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ஒரு கிராம் எடையுள்ள 4.41 லட்சம் தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Published on: July 14, 2026 at 11:47 am

சென்னை, ஜூலை 14. 2026 : தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கையாக, ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த (டெண்டர்) அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அறிவிப்பின்படி, ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒரு கிராம் தங்கத்தின் கொள்முதல் விலை ரூ.5,725 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், டெண்டரில் பங்கேற்க விரும்புவோர் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் மற்றும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தமிழர் பாரம்பரியத்தின் ‘தாய்மாமன் சீர்’ மரபை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தாய்-சேய் நலனை ஊக்குவிப்பதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் பெருமையை கொண்டாடும் வகையிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க : மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com