‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்!

Vietnam Boat Tragedy: வியட்நாமில் 15 இந்தியர்கள் உயிரிழந்த படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிர்மல் குமார், “படகில் ஏறிய 3 நிமிடங்களிலேயே மிகப்பெரிய அலை தாக்கி படகு தலைகீழானது” என அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்துள்ளார்.

Published on: July 14, 2026 at 12:16 pm

சென்னை, ஜூலை 14 2026: வியட்நாமின் பு குவொக் (Phu Quoc) தீவு அருகே ஜூலை 11 அன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேக படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அதில் உயிர் தப்பிய திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நிர்மல் குமார், சென்னை வந்த பிறகு விபத்தின் திகிலூட்டும் தருணங்களை பகிர்ந்துள்ளார். 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 உள்ளூர் பணியாளர்களுடன் சென்ற படகு, பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

நிர்மல் குமார் கூறுகையில், “படகில் ஏறி மூன்று நிமிடங்களே ஆன நிலையில், சுமார் 300 மீட்டர் தூரம் சென்றபோது மிகப்பெரிய அலை ஒன்று படகை தாக்கியது. ஒரு பக்கமாக சாய்ந்த படகில் பயணிகள் மறுபக்கமாக நகர்ந்ததால் எடை சமநிலை குலைந்து படகு முழுவதுமாக தலைகீழாக கவிழ்ந்தது. படகின் முன்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கடலில் குதித்து தப்பிய நிலையில், பின்பகுதியில் இருந்த சுமார் 15 பேர் மூடப்பட்டிருந்த படகுக்குள் சிக்கிக் கொண்டனர்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Vietnam Boat Tragedy
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் சென்னை வருகை

மீட்புக் குழுவினர் சுமார் 10 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்து வெளியே மிதந்தவர்களை மீட்டனர். ஆனால் படகுக்குள் சிக்கியவர்களை வெளியே எடுக்க 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆனதாக நிர்மல் குமார் கூறினார்.

இந்த விபத்தில் தனது சிறுவயது நண்பரான முருக பிரபு உயிரிழந்ததாகவும், அவரது உடலை மீட்டு அனைத்து நடைமுறைகளும் முடியும் வரை வியட்நாமிலேயே தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்தில் போதிய அவசர மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இருந்திருந்தால் மேலும் 4 அல்லது 5 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திரப் பிரதேசம் மற்றும் 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சிகிச்சை பெற்ற 16 பேர் இந்தியா திரும்பியுள்ள நிலையில், ஒருவருக்கு வியட்நாமில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அரசுகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

இதையும் படிங்க : மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை! IND-W vs ENG-W

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள்

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி! Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com