லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை!

IND-W vs ENG-W : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

Published on: July 14, 2026 at 1:34 pm

லண்டன், ஜூலை 14, 2026 : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா வெற்றி பெற்று, அங்கு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் மகளிர் அணியாக புதிய வரலாறு படைத்துள்ளது.

457 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, இறுதி நாளில் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாமல் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒரே ஒரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. மேலும், இங்கிலாந்து மண்ணில் மகளிர் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தோல்வியற்ற சாதனையும் தொடர்கிறது.

இந்த வெற்றியால், இந்திய மகளிர் அணி தனது கடைசி 11 டெஸ்ட் போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில், குறிப்பாக உலகின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கிடைத்த இந்த வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்று வெற்றிக்காக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இங்கிலாந்துக்கு எதிராக 270 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த அபார வெற்றி இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சாதனையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த 17 ஆண்டுகால பந்தம்.. சி.எஸ்.கே அணியில் இருந்து பிளெமிங் விலகல்!

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை! IND-W vs ENG-W

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com