ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு… இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Price Today : ஜூலை 14-ஆம் தேதி சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 சரிந்துள்ளது.

Published on: July 14, 2026 at 11:23 am

Updated on: July 14, 2026 at 11:24 am

சென்னை, ஜூலை 14 2026: சென்னையில் இன்று (ஜூலை 14) தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவடைந்துள்ளது. குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

நேற்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.13,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.50 குறைந்து ரூ.13,150 ஆக விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.1,05,600 இருந்த நிலையில், இன்று ரூ.1,05,200 ஆக குறைந்துள்ளது.

அதேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.14,345-க்கு விற்பனையாகிறது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை ரூ.1,14,760 ஆக உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.235 ஆக குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தினசரி சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்ளூர் தேவையைப் பொறுத்து மாறுபடுகின்றன.

இதையும் படிங்க பி.எஃப் வட்டி விகிதம் 8.5 சதவீதம்.. மாதந்தோறும் ஏன் கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com