டெல்லியில் நடுரோட்டில் பயங்கரம்.. மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்!

Delhi Cop Wanted for Wife’s Murder : டெல்லியில் பட்டப் பகலில் மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Published on: July 13, 2026 at 5:35 pm

புதுடெல்லி, ஜூலை 13, 2026: டெல்லியில் திங்கள்கிழமை அதிகாலை நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில், காவலர் மனிஷ் பாதி தனது மனைவி பிரியங்காவுடன் ஸ்கூட்டரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், பாதி ஸ்கூட்டரை நிறுத்தி, சாலையின் நடுவே மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் துப்பாக்கியால் பிரியங்காவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள், மனிஷ் தனது மனைவியை சுட்டுவிட்டு சாலையிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தனர். சாலையோரத்தில் இரத்தத்தில் தவித்திருந்த பிரியங்காவை ஒரு டெலிவரி ஊழியர் கண்டுபிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். பிரியங்கா, கிழக்கு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி (எல்.பி.எஸ்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், காயம் மிகக் கடுமையாக இருந்ததால் பிரியங்கா உயிரிழந்தார். 26 வயதான பிரியங்கா ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இன்று அவரது பிறந்தநாளாக இருந்தது என்பதும் இந்தச் சம்பவத்தை இன்னும் வேதனையாக்கியுள்ளது.

மனிஷ் பாதி சமீபத்தில் கிழக்கு டெல்லி வாகனத் திருட்டு தடுப்பு பிரிவில் (AATS) பணியமர்த்தப்பட்டிருந்தார். தற்போது அவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : அயோத்தி நன்கொடை கையாடல்.. அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிப்பு: புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் முக்கிய அம்சங்கள்! 50% Lok Sabha Seats Increase

அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிப்பு: புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில்

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்! Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி! 26/11 Mumbai Terror Attack Remembrance

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர்

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி Women's Reservation

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com