20 நாள்களில் ரூ.100 கோடி வசூல்.. ஒ.டி.டி. தளத்தில் சமந்தா படம்!

Maa Inti Bangaaram on OTT: நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் திரைப்படம் ஜியோஹாட் ஸ்டார் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

Published on: July 14, 2026 at 6:42 pm

ஹைதராபாத், ஜூலை 14, 2026: நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்த ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் ஜூலை 17 முதல் ஜியோஹாட் ஸ்டார் ஒ.டி.டி. (OTT) தளத்தில் வெளியாகிறது. பி.வி நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம், உலகளவில் ₹100 கோடி வசூல் செய்த முதல் பெண்மணி முன்னணி தெலுங்கு படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்தப் படத்தின் கதை கதாநாயகி ஸ்வர்ணா (சமந்தா) தனது குடும்ப வாழ்க்கையை அமைதியாக நடத்த முயற்சிக்கும் போது, கடந்த காலத்தின் இருண்ட ரகசியங்கள் அவளை சவாலுக்கு உள்ளாக்குகின்றன.
அந்த வகையில் இப்படம், படம் குடும்ப உணர்வுகள், அதிரடி, காதல் மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றை இணைத்து, வணிக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில், சமந்தா ரூத் பிரபு, குல்ஷன் தேவையா, டிகந்த் மஞ்சலே, ஸ்ரீமுகி, கவுதமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மா இன்டி பங்காரம் பெண்மணி முன்னணி படங்களில் உலகளவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், படத்தின் வெற்றியால், தொடர் (sequel) படம் உருவாக்கப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சென்னையில் புதிய வீடு கிரகப்பிரவேஷம்.. ஸ்ருதிஹாசன் அசத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com