‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு.. ஃபஹத் ஃபாசிலின் நடிப்புக்கு புகழாரம்!

Don’t Trouble the Trouble: ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசிலை புகழ்ந்துள்ளார் மகேஷ் பாபு.

Published on: October 1, 2026 at 2:12 pm

ஹைதராபாத், அக்.1, 2026: ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு-மலையாள இருமொழி ஃபேண்டஸி திரைப்படமான ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சஷாங்க் யெலெட்டி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா பாலேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வழங்குகிறார். படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகர் மகேஷ் பாபு அதைப் பார்த்து தனது முதல் விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மகேஷ் பாபு தனது எக்ஸ் தளப் பதிவில், ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ படத்தைப் பார்த்ததாகவும், அது முழுமையான சினிமா அனுபவத்தை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். சிறப்பாக உருவாக்கப்பட்ட மகிழ்ச்சியான திரைப்படமாக இருப்பதுடன், ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையிலும் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் படம் அமைந்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். திரைப்படம் முழுவதும் அரிதாகக் காணப்படும் ஒரு அன்பான, வெப்பமான உணர்வு இருப்பதாகவும் மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஃபகத் ஃபாசிலின் நடிப்பை மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஃபகத் ஒரு சிறந்த நடிகர் என்றும், அவர் தொடர்ந்து புதிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, பரிசோதனை செய்து, தனது நடிப்பில் புதிய பரிமாணங்களை உருவாக்கி வருவது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். தனது கதாபாத்திரங்களைத் தொடர்ந்து புதுமையாக அணுகும் ஃபஹத்தின் திறமை தன்னை கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஃபஹத் ஃபாசிலும் குழந்தை நட்சத்திரம் சாரா பாலேகரும் இணைந்து நடித்துள்ள காட்சிகளை மகேஷ் பாபு சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் திரையில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், அவர்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு தருணத்திலும் உயிரோட்டத்துடனும் உணர்வுகளுடனும் இருப்பதைப் பார்க்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : ரூ.104 கோடியை கடந்த தி பாரடைஸ்.. நானி படத்தில் அதிக வசூல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com