நாக சைதன்யா சோபிதா திருமணத்தில் கலந்து கொள்ள சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
நாக சைதன்யா சோபிதா திருமணத்தில் கலந்து கொள்ள சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகின்றன.
Published on: December 3, 2024 at 9:23 pm
Naga Chaitanya-Sobita wedding | நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா- சோபிதா திருமணம், டிசம்பர் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் இந்த திருமணம் நடைபெறுகிறது.
இந்தத் திருமணத்தில் அதி முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கிடையில், இந்த திருமணத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் முன்னாள் காதல் மனைவியான நடிகை சமந்தா திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் ஆந்திர மாநிலத்தை கலங்கடிக்கின்றன. இந்தச் செய்திகளில் உண்மை இல்லை. நாகச் சைதன்யாவின் வருங்கால மனைவியான சோபிதாவின் தங்கை பெயர் சமந்தா எனக் கூறப்படுகிறது. இந்த சமந்தா தான் நாக சைதன்யா, திருமணத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது ;சென்னை உயர்நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com