திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: December 3, 2024 at 2:24 pm
Chennai High Court Order | கடந்த மாதம் வெளியான கங்குவா திரைப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமர்சனங்களால்தான் திரைப்படங்கள் தோல்வியடைவதாக்கக் கூறி படம் வெளியாகி 3 நாட்களுக்கு ரசிகர்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்றும் அவற்றிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விமர்சிப்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதனால், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது. அவதூறு பரப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம் என்று கூறி தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com