How to make meal maker gravy | சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான மீல் மேக்கர் கிரேவி இப்படி பண்ணுங்க.
How to make meal maker gravy | சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான மீல் மேக்கர் கிரேவி இப்படி பண்ணுங்க.
Published on: December 3, 2024 at 1:57 pm
How to make meal maker gravy | சுவையான மீல் மேக்கர் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
மீல் மேக்கர் – 1 கப்
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
பட்டர் -1 டேபிள் ஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
நட்சத்திர சோம்பு -1
பட்டை- சிறிய துண்டு
ஏலக்காய் -1
கிராம்பு -2
பிரியாணி இலை -1
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி -2
காஷ்மீரி மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
மல்லி தூள் -2 டீஸ்பூன்
சீரகத்தூள் -½ டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகுத்தூள் ½ டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
புதினா இலை – சிறிதளவு
தயிர் -¼ கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் கொதித்ததும் ஒரு கப் மீல் மேக்கர் சேர்க்க வேண்டும். கொதிநீரில் நான்கு நிமிடம் வெந்ததும் மீல் மேக்கரை வடிகட்டி அதன் மீது தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி மீல்மேக்கரை பிழிந்து தண்ணீர் இல்லாதவாறு வேறு பாத்திரத்தில் மாற்றவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அடுப்பு தீ யை லோ ஃபிளேமில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
இதனுடன் மீல் மேக்கரை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் சோம்பு, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். இதனுடன் இரண்டு அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பு தீ யை லோ ஃப்ளேமில் வைத்து மசாலாவின் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து வதக்கவும்.
இது கிரேவிக்கு நல்ல ஒரு ஃப்ளேவரை கொடுக்கும். இதோடு புளிக்காத தயிர் சேர்த்து கிளறி விடவும். தயிரை சேர்த்த உடன் நன்கு கிளற வேண்டும் இல்லை எனில் திரி திரியாக மாறிவிடும். அடுப்பு தீ யை லோ ஃப்ளேமில் வைத்து கிரேவியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி போட்டு வேக விடவும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் ஏற்கனவே வறுத்து வைத்த மீல் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். கிரேவி வெந்து வந்த பின்னர் இறுதியாக சிறிது கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார் இது சப்பாத்தி, இட்லி, தோசை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : ஸ்பெஷலான ஸ்பானிஷ் ஆம்லெட் ; முட்டையை இப்படி செஞ்சு பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com