நடிகை சினேகாவுக்கு அன்பு மழை பொழிந்த நடிகர் பிரசன்னா.. என்ன சொன்னார் தெரியுமா?

Sneha Birthday Wishes: நடிகை சினேகாவின் பிறந்தநாளையொட்டி, அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா சமூக வலைதளத்தில் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

Published on: October 14, 2026 at 3:31 pm

சென்னை, அக்.14, 2026: நடிகை சினேகாவின் பிறந்தநாளையொட்டி, அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா சமூக வலைதளத்தில் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். சினேகாவுடன் எடுத்த பல புகைப்படங்களைப் பதிவிட்டு, அவரைப் பற்றிய தனது அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பதிவில், சினேகா தனது நடிப்புத் தொழிலில் கடினமாக உழைப்பதோடு, சிறந்த தாயாகவும், தனக்கு நெருக்கமான தோழியாகவும், மிகப்பெரிய ஆதரவாகவும் இருப்பதாக பிரசன்னா பாராட்டியுள்ளார். மேலும், சினேகாவின் குறும்புத்தனமும் நகைச்சுவை உணர்வும் தன்னை மகிழ்விப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சினேகாவைப் பாராட்டுவதை அடிக்கடி வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட பிரசன்னா, அவரது மனவலிமை, அன்பு மற்றும் குணநலன்கள் தன்னை ஒவ்வொரு நாளும் புதிதாகக் காதலிக்கச் செய்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். எந்தப் பிறவியாக இருந்தாலும் சினேகாவையே தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பேன் என்று அவர் பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : ஜெய் புதிய படம்.. தென்காசியில் படப்பிடிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com