Jai New Film Shooting: தென்காசியில் தொடங்கியது நடிகர் ஜெய்யின் புதிய படப்பிடிப்பு.
Jai New Film Shooting: தென்காசியில் தொடங்கியது நடிகர் ஜெய்யின் புதிய படப்பிடிப்பு.

Published on: October 14, 2026 at 2:48 pm
திருநெல்வேலி, அக்.14, 2026: நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கும் புதிய திகில் நகைச்சுவைத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம், தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகிறது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இப்படத்தை இயக்குகிறார். ஜெய்க்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். திகிலும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாக உள்ளது.
ஏ.எம். பிரபாகரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல் காட்சிக்கான கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன் முதல் காட்சிக்கான கிளாப் அடித்தார்.
விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ராம் குமார் சண்டைப் பயிற்சியைக் கையாள்கிறார். தென்காசியில் தொடர்ந்து 23 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது! பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com