திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருச்செந்தூரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Published on: December 14, 2024 at 3:27 pm
Tiruchendur | திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 56,000 கனஅடி நீர் நிரம்பி வழிகிறது. இதனால், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் போன்ற சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
ஏரல் ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. புன்னைக்காயல் பகுதியில் உள்ள வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க வளிமண்டல கீழடுக்கு சுழற்சி : தூத்துக்குடி, திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com