தவெக தலைவர் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம்

Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Published on: April 28, 2026 at 10:48 am

Updated on: April 28, 2026 at 4:23 pm

திருச்செந்தூர், ஏப் 28, 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக இன்று அதிகாலை திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், ‘வெற்றி வேல்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

நன்றி: ஐ.ஏ.என்.எஸ்

விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடாக திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அவரது இந்த கோவில் தரிசனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : விஜய்க்கு எதிரான மனு.. சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு ₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com