Land Fraud Probe Gautami Appears : நடிகை கௌதமி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்; அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
Land Fraud Probe Gautami Appears : நடிகை கௌதமி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்; அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Published on: July 28, 2026 at 1:25 pm
சென்னை, ஜூலை 28, 2026: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் நடிகை கௌதமி, தனது முன்னாள் உதவியாளர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளித்த நில மோசடி புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் அளித்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி, 11 கோடி ரூபாய்க்கு விற்றும், தன்னிடம் 4.10 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அவரது புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதானவர்களின் சொத்துகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, நடிகை கௌதமிக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஜூலை 27 அன்று அவர் சென்னை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு, வழக்கு தொடர்பான வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : தி.மு.க அறக்கட்டளை சொத்து விவரங்கள் மறைப்பு.. மு.க ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com