திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு! ஆதாரம் இல்லாமல் விஜய் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் காட்டம்

DMK Allegations: திமுக மீது முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர், அமலாக்கத்துறை தெரிவித்தவை இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றும், அரசியல் மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Published on: September 7, 2026 at 4:36 pm

சென்னை, செப். 7 2026: திமுக ஊழல் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதாரமின்றி திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தங்களது கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தபோது, திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தெரிவித்த தகவல்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்காததால் திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், திமுக மீது முதல்-அமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவித்தார். 45 நிமிடங்கள் பேசிய முதலமைச்சர், தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனம் போன்று பேசியதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், அமலாக்கத்துறை தெரிவித்தவை குற்றச்சாட்டுகள் மட்டுமே என்றும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் உதயநிதி கூறினார். மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசுவதற்கு விஜய்க்கு தகுதி இல்லை எனவும், அரசியல் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் பயப்படாது என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற சோதனையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: “ஊழலின் ஊற்றுக்கண் திமுக!” – சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய முதல்வர் விஜய்!

“ஊழலின் ஊற்றுக்கண் திமுக!” – சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய முதல்வர் விஜய்!
CM Vijay assembly speech

“ஊழலின் ஊற்றுக்கண் திமுக!” – சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய முதல்வர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com