ISRO Clarification: இஸ்ரோவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் பரவி வரும் தகவல்கள் தவறானவை என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தெளிவுபடுத்தியுள்ளது.
ISRO Clarification: இஸ்ரோவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் பரவி வரும் தகவல்கள் தவறானவை என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தெளிவுபடுத்தியுள்ளது.

Published on: September 7, 2026 at 3:40 pm
புதுடெல்லி, செப். 7 2026: இஸ்ரோவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாகவும் ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளப் பதிவில் இஸ்ரோ, தனியார்மயமாக்கப்படாது என்றும், அதன் முக்கியத்துவம் குறைக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிப்பது, இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்கான நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோ இன்னும் அதிக கவனம் செலுத்த முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஏற்கனவே வளர்ச்சி பெற்றுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களை தொழில்துறை நிறுவனங்கள் அதிக அளவில் மேம்படுத்தி, உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலில் ஈடுபட முடியும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளித் துறை சுற்றுச்சூழல் அமைப்பு மேலும் விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், முதிர்ச்சி அடைந்த மற்றும் பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய பணிகளை இந்திய தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான உற்பத்தி, வணிகமயமாக்கல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுதல் ஆகியவை அதிகரிக்கும். அதேவேளையில், இஸ்ரோவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேம்பட்ட ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் சிக்கலான தேசிய விண்வெளித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.
விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் நோக்கம் இஸ்ரோவை தனியார்மயமாக்குவது அல்ல; இந்தியாவின் விண்வெளித் துறை சூழலியலை விரிவுபடுத்தி, திறன்களைப் பலமடங்கு அதிகரிப்பதே என இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. விரிவடைந்து வரும் நாட்டின் விண்வெளித் திட்டங்களுக்கு தேவையான முதலீடு, உற்பத்தித் திறன் மற்றும் பெரிய அளவிலான செயல்பாட்டு திறனை தனியார் மற்றும் தொழில்துறை அமைப்பு வழங்கும் என்றும், இதனால் இஸ்ரோ தனது வளங்களையும் அறிவியல் மனிதவளத்தையும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய விண்வெளிப் பணிகளுக்கு அதிகமாக ஒதுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் வின்ட் எனர்ஜி இந்தியா 2026.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com